Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.
100+ Courses
Expert Mentors
Lifetime Access
Enter your email to receive a verification code
By continuing, you agree to our Terms of Service and Privacy Policy
we’ve sent a 6-digit verification code to
youremail@gmail.com
Join thousands of learners on their journey to success
Enter your email to receive a verification code
By continuing, you agree to our Terms of Service and Privacy Policy
Dive into the most talked about books of the season
மிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அண்மையில் வெளியிட்ட குரூப் 2/2A முதன்மைத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் "அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்" என்ற பாடப்பகுதி இடம் பெற்றுள்ளது. அப்புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்நூலை வடிவமைத்து எழுதியுள்ளார் பேராசிரியர் இளையராஜா கண்ணன். போட்டித்தேர்வர்களுக்கு அவசியம் தேவைப்படுகின்ற இந்நூலில், "அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்" சார்ந்த தலைப்புகள் எல்லாவற்றையும், எளிதில் புரியும்படி படங்கள் மற்றும் முக்கியக் குறிப்புகளுடன் நூலாசிரியர் விளக்கியுள்ளது இந்நூலின் பல்வேறு சிறப்புகளில் முதலிடம் வகிப்பதாகும். இதற்கு சிகரம் வைத்தாற் போன்று அத்தகு தலைப்புகள் ஒவ்வொன்றின் முடிவிலும் "நடப்பு நிகழ்வுககளை" தொகுத்தளித்துள்ளார் பேராசிரியர். மேலும் நூலில் கையாளப்பட்டுள்ள அனைத்து தொழில்நுட்ப வார்த்தைகளுக்கும் பொருத்தமான ஆங்கில விளக்கமும் தரப்பட்டுள்ளன. அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பாடத்துறை என்பது தினம்தினம் வளர்ந்து வரும் ஒன்று; சற்றே கடினமானதும் கூட. ஆனால் ஒரு முறை வாசித்தாலே வசப்படும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளதால் போட்டித் தேர்வர்கள் இனி அச்சப்பட வேண்டியதில்லை. அந்த வகையில் ஏற்கனவே பலரும் இந்நூலை வாங்கிப் படித்து பயனடைந்துள்ளதற்கு இந்நூலின் இந்த இரண்டாம் பாதிப்பே சாட்சியாகும். தரமான தாள், இரு வண்ணத்தில் அச்சடிப்பு, காலத்திற்கும் தாங்கி நிற்கும் ஏட்டுக் கட்டுமானம் என ஒவ்வொரு அங்குலத்திலும் ஜொலிக்கும் இந்நூல் கிரவுன் அளவில் 608 பக்கங்களில் வெளியாகியுள்ளது. இத்தனை சிறப்புக்கும் நீங்கள் கொடுக்கும் விலை ரூ.669/- மட்டுமே. எனவே போட்டித்தேர்வர்கள் இந்நூலை நழுவவிட வேண்டாம். தேர்விலும் வாழ்விலும் வெற்றி பெற எங்கள் வாழ்த்துகள் .... வாழ்க வல்லமையுடன் பொருளடக்கம் UNIT-1 அணு, அணுக்கரு இயற்பியல் மற்றும் அணு ஆற்றன் பயன்பாடுகள் - 1. அணுக்கரு இயற்பியல் - 2. அடிப்படை துகள்கள் - 3. அணுக்கருக்கள் - 4. அணுவின் நிலைப்பு தன்மை - 5. அணு மாதிரிகள் - 6. கதிரியக்கம் - 7. அணு ஆற்றன் பயன்கள் - 8. அணுசக்தி தொடர்பான அமைப்புகள், திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் UNIT-II மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் - 1. திண்மங்களின் ஆற்றல் - 2. குறைகடத்தியின் வகைகள் - 3. டையோடுகள் - 4. ஒளி எலக்ட்ரானியல் கருவிகள் - 5. டிரான்சிஸ்டர் - 6. இலக்கமுறை எலக்ட்ரானியல் - 7. தகவல் தொடர்பு அமைப்புகள் - 8. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் அரசின் முன்முயற்சிகள், திட்டங்கள், கொள்கைகள் UNIT-III ரோபோடிக்ஸ் மற்றும் அதன் பயன்பாடுகள் - 1. எந்திரனியல் - 2. ரோபோ தொழில்நுட்பத்தில் அரசின் முன்முயற்சிகள், திட்டங்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகள் UNIT-IV நானோ தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள் - 1. நானோ தொழில்நுட்பத்தின் அடிப்படைகள் - 2. நானோ விவசாயம் - 3. பசுமை மீநுண் (நானோ) தொழில்நுட்பம் - 4. நானோ தொழில்நுட்பத்தில் அரசின் முன்முயற்சிகள், திட்டங்கள் மற்றும் கொள்கைகள் UNIT-V வேதி மின்கலம் மற்றும் உயிர் வேதியியல் - 1. மின்வேதியியல் - மின்கலன்கள் - 2. வாயுநிலை எரிபொருள் - 3. பலபடியாக்கல் - 4. கார்போஹைட்ரேட்டுகள் - 5. ஆன்டிபயாடிக்ஸ் - 6. வைட்டமின்கள் - 7. மின்கலம், பாமலிர், கார்போஹைட்ரேட், விட்டமின்கள் எதிர் உயிரிகள் தொடர்பான அண்மைகால நிகழ்வுகள் UNIT-VI புவி தகவல் தொகுப்பின் GIS பயன்பாடுகள் - 1. தொலை நுண்ணுணர்வு - 2. உலகளாவிய ஊடுருவல் (வழிகாட்டும்) செயற்கை கோள் அமைப்பு - 3. புவியியல் தகவல் அமைப்பு - 4. புவிதகவல் தொகுப்பின் பயன்கள் - 5. GIS தொடர்பான அரசின் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் UNIT-VII உயிரி தொழில்நுட்பவியல் மற்றும் அதன் பயன்பாடுகள் - 1. கோட்பாடுகள், உயிரி தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நவீன முன்னேற்றங்கள் - 2. மரபணு பொறியியலுக்கான கருவிகள் - 3. தாவர மரபணு பொறியியல் - 4. மரபணு மாற்றபட்ட தாவரங்கள் மற்றும் அவற்றினால் ஏற்படும் சமூக, சுற்றுச்சூழல் தாக்கங்கள் - 5. பயிரி மேம்பாட்டிற்கான உயிரி தொழில்நுட்ப முறைகள் மற்றும் வனவியல் தோட்டக்கலையில் தாவர திசு வளர்ப்பின் பயன்கள் - 6. உயிரி தொழில்நுட்ப பயன்பாடுகள் - 7. உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசின் திட்டங்கள், மற்றும் அண்மைகால நிகழ்வுகள் UNIT-VIII இனப்பெருக்க நவீன தொழில்நுட்பங்கள் - 1. கருப்பையினுள் விந்தணுக்களை செலுத்துதல் (IUI) - 2. உடல் வெளிக் கருவுறுதல் (IVF/Test Tube Baby) - 3. அண்ட சைட்டோ பிளாசத்தினுள் விந்து செல்லை செலுத்துதல் (ICSI) - 4. அண்ட நாளத்தினுள் இனச்செல் இடமாற்றம் (GIFT) - 5. விந்தணுக்கள் உறைநிலை குளிரூட்டும் முறை - 6. முக்கிய திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் UNIT-IX தடுப்பு மருத்துவம் - 1. தடுப்பு மருந்துகள் - 2. தடுப்பு மருந்து தொடர்பான, ஆராய்ச்சிகள், முன்முயற்சிகள் UNIT-X அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாட்டு அறிவியலாளர்களின் பங்களிப்பு UNIT-XI எண்ம கணினியும் அவற்றின் பயன்பாடுகளும் - 1. எண்ம கணினி மற்றும் வன்பொருட்கள் - 2. அமைப்பு மென்பொருள் - 3. பயன்பாட்டு மென்பொருள் - 4. தகவல் தொடர்பு மென்பொருள் - 5. கணிப்பொறி வலையமைப்பு - 6. பல்லூடகம் - 7. வலையமைப்பு பாதுகாப்பு - 8. கணினி சார்ந்த திட்டங்கள், முன்முயற்சிகள் UNIT-XII தகவல் தொழில்நுட்பம் சார்ந்த முக்கிய தலைப்புகள் - 1. செயற்கை நுண்ணறிவு [Artificial Intelligence (AI)] - 2. இயந்திரக் கற்றல் [Machine Learning (ML)] - 3. மேகக் கணிமை (Cloud Computing) - 4. நம்பிக்கை இணையம் (Blockchain) - 5. இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) - 6. குவாண்டம் கணினி (Quantum Computer)
ள்ளிட்ட பல்வேறு அரசுப்பணி போட்டித் தேர்வர்களுக்கு பயன் தரும் வகையிலும், அதே நேரம் பாடத்திட்டம் மற்றும் முந்தைய தேர்வு வினாத்தாள்களை மையமாகக் கொண்டும் பல்வேறு நூல்களை திறம்பட எழுதி வருபவர் பேராசிரியர் இளையராஜா கண்ணன். அந்த வகையில் அவர் எழுதியுள்ள "தமிழ்நாட்டின் புவியியல்" என்ற இந்த நூல் ஓர் மைல் கல் என்றே கூற வேண்டும். இது போட்டித் தேர்வர்கள் மட்டுமல்லாது, புவியியலை பாடமாகத் தெரிவு செய்துள்ள பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்நாட்டின் புவியியலை அதன் சுற்றுச் சூழல், பேரிடர் மேலாண்மை தொட்டு அறிந்து கொள்ள விளையும் பொதுமக்கள், இத்துறைசார் அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் என எல்லோருக்கும் பயன்தருவதாகும். தமிழ்நாட்டின் புவியியல் என்ற பாடப்பிரிவில் விளக்கமான மற்றும் அண்மைக்கால சூழலை ஒட்டிய நூல்கள் ஏதும் இல்லாத குறையை இந்நூல் நிறைவு செய்கின்றது என்று சொன்னால் அது மிகையன்று. வாசிப்பவர்கள் யாவரும் தமிழில் இப்படி ஒரு நூலை இதுகாறும் பார்த்தது இல்லை என்று சொல்லக்கூடிய அளவில் பக்கத்திற்கு பக்கம் புள்ளி விவரங்கள், அட்டவணை விளக்கங்கள், வரைபட வடிவிலான தரவுகள், தமிழ்நாட்டின் நிலவியல் இயற்கூறுகளை காட்டும் நாட்டுப்படங்கள் (Maps), கலைச்சொற்களுக்கான பொருள்கள் என இதன் சிறப்பம்சங்கள் பெரும் பட்டியலாக நீளுகின்றது. குறிப்பாக முக்கிய விடயங்கள் யாவற்றையும் ஊதா நிற பின்னணிக்குள் தந்திருப்பது வெகு சிறப்பு. இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்நூலின் உள்ளடக்கம்தான் என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வம் மேலிடுகின்றது அல்லவா? வாருங்கள் இந்த நூலுக்குள் செல்வோம். இந்நூலை மொத்தம் 10 அலகுகளாக பிரித்துள்ள இதன் ஆசிரியர், அத்தகு அலகு ஒவ்வொன்றின் கீழும் பல அத்தியாயங்களின் வாயிலாக தமிழ்நாட்டின் புவியியலை எளிய தமிழில் தெளிவுற படம் பிடித்துக் காட்டுகின்றார். வெகு நேர்த்தியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ள அந்த 10 அலகுகளும் அத்தியாயங்களும் பின்வருமாறு:- அலகு I தமிழ்நாட்டின் புவியியல் மற்றும் இயற்கை அமைப்பு - 1. தமிழ்நாட்டின் புவியியல் - 2. தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு - 3. தமிழ்நாட்டின் அமைவிடம் மற்றும் அரசியல் பிரிவுகள் அலகு II தமிழ்நாட்டின் காலநிலை மற்றும் மண்வளம் - 1. தமிழ்நாட்டின் காலநிலை - 2. தமிழ்நாட்டின் பருவகாலம் - 3. தமிழ்நாட்டின் மண்வளம் அலகு III தமிழ்நாட்டின் வன வளங்கள் - 1. தமிழ்நாட்டின் காடுகள் - 2. தமிழ்நாட்டின் வன உயிரின வளம் அலகு IV தமிழ்நாட்டின் விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் நீர்வள மேலாண்மை - 1. தமிழ்நாட்டின் வேளாண்மை - 2. தமிழ்நாட்டின் நீர்வளம் - 3. தமிழ்நாட்டின் கால்நடை வளங்கள் - 4. தமிழ்நாட்டின் பால்வளம் - 5. தமிழ்நாட்டின் மீன்வளம் அலகு V தமிழ்நாட்டின் கனிம வளங்கள், ஆற்றல் வளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் - 1. தமிழ்நாட்டின் கனிம வளம் மற்றும் ஆற்றல் வளம் - 2. தமிழ்நாட்டின் தொழிற்துறை அலகு VI தமிழ்நாட்டின் போக்குவரத்து - 1. சாலைப்போக்குவரத்து - 2. இரயில் போக்குவரத்து - 3. நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து அலகு VII தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் தமிழ்நாடு எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் - 1. சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு - 2. காற்று மாசுபாடு - 3. நீர் மாசுபாடு - 4. ஒலி மாசுபாடு - 5. மண் மாசுபாடு - 6. இதர மாசுபாடுகள் (வெப்ப மாசுபாடு, கதிரியக்க மாசுபாடு, மின்னணு மாசுபாடு) - 7. திடக்கழிவு மேலாண்மை - 8. இயற்கை வளங்கள் அலகு VIII உயிரினப் பன்மை - 1. உயிரின பன்மை மற்றும் வகைப்பாடு - 2. பல்லுயிர்த் தன்மைக்கான அச்சுறுத்தல் / இனங்கள் அழிவதற்கான காரணங்கள் - 3. உயிரினப் பன்மை பாதுகாப்பு - 4. தமிழக அரசின் உயிரினப் பன்மை பாதுகாப்பு நடவடிக்கைகள் - 5. தமிழ்நாட்டின் பல்லுயிர்ப் பெருக்கம் அலகு IX காலநிலை மாற்றம் - 1. புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றச் செயல்பாடுகள் - 2. தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் நிர்வாகம் - 3. காலநிலை மாற்றத்திற்கான தமிழக அரசின் செயல்திட்டங்கள் - 4. தூய்மையான ஆற்றல் மற்றும் பசுமை ஆற்றல் - 5. காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடுகள் மற்றும் நடவடிக்கைள் - 6. நிலையான நீடித்த வளர்ச்சி அலகு X பேரிடர் மேலாண்மை - 1. பேரிடர் - 2. இயற்கை பேரிடர் - 3. மானுடவியல் (மனிதனால் ஏற்படுத்தப்பட்ட) பேரிடர்கள் - 4. தமிழ்நாட்டில் பேரிடர் மேலாண்மை நிலைகள், நிதிப்பகிர்வு மற்றும் கொள்கைகள் - 5. பேரிடர் அபாய நிர்வாகம், ஆணையங்கள் / குழுக்கள் - 6. பேரிடர் மீட்பு நடைமுறைகள் - 7. தமிழ்நாட்டில் பேரிடர் மேலாண்மையில் அரசு சாரா மற்றும் குடிமை சமூகத்தின் பங்கு இவ்வாறு விரிவான உள்ளடக்கத்தைக் கொண்ட இந்த நூல் தமிழ்நாட்டின் புவியியலை முதற்கண் படிப்படியாக விளக்கி, பின் சுற்றுச்சூழலை பல்லுயிரியம் மற்றும் காலநிலை மாற்றத்துடன் சொல்லி, நிறைவாக பேரிடர் மேலாண்மை எனும் பெரும் இயலுடன் நமக்கு விடை தருகின்றது. தமிழ்நாட்டின் புவியியல் விவரங்கள் தாங்கிய ஓர் பெட்டகமாக கிரவுன் அளவிலான தாளில் 462 பக்கங்களில் வண்ண அச்சுடன் வெளிவந்திருக்கும் இந்த நூலின் விலை ரூ.650/- மட்டுமே. எனவே அரிய இந்த நூலை நழுவிட வேண்டாம். தேர்விலும் வாழ்விலும் வெற்றி பெற நல்வாழ்த்துகள் வாழ்க வல்லமையுடன்